காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வீச்சு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு பேருந்து நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் குண்டை வீசிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடித்ததில் 28 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் கையெறி குண்டை வீசிய நபரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு நகரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இது மூன்றாவது கையெறிகுண்டு தாக்குதல் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
0 Comments