கும்பகோணத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கும்பகோணம், ஆண்டியப்பன் தெருவை சேர்ந்தவர் சாந்தாராமன், அவரது மகன் மகன் பிரவீன் வயது 27, கடந்த 14 ந்தேதி வீட்டின் முன்பு ரூ. 85 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை நிறுத்திபிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வெளியே நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதேபோன்று, அன்று இரவு செம்போடை பகுதியை சேர்ந்த வைரவேந்தன்(26), என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனமும் திருட்டு போயுள்ளது. இது குறித்து பிரவீன் மற்றும் வைரவேந்தன் ஆகியோர் மேற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக எழுமிச்சங்காபாளையத்தை சேர்ந்த தீனதயாளன்(28), தாமோதரன்(24) மற்றும் மதுக்கூர், ராமானந்தபுரத்தை சேர்ந்த சிவபாரதி(20) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
0 Comments