தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:- என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு தெலங்கானா ஆளுநர் பொறுப்பை பிரதமர் மோடி அளித்திருக்கிறார் . பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றி.
என் மீது பாசத்தை பொழிந்த தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி. தெலங்கானா வளர்ச்சிக்கு மட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாடுபடுவேன். தெலங்கானாவுக்கு ஆளுநர் ஆனாலும், தமிழகத்திற்கு என்றும் சகோதரி தான். எல்லோரோடும் எளிமையாக பழகும் தன்மையை எந்த உயரத்துக்கு சென்றாலும் விட்டுவிடக்கூடாது என்பதை என் வாழ்நாள் கொள்கையாக வைத்திருக்கிறேன். இந்த வயதில் இத்தனை உயர்வு என்பது எதிர்பார்க்காத ஒன்று" இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments