Tamil Sanjikai

சமீபத்தில் சான் ஃப்ரான்சிஸ்கோவில், Goldman Sachs நிறுவனத்துக்கு பேட்டி அளித்த ட்விட்டர் செயல் அதிகாரி ஜாக் டார்சே " ட்விட்டர் பயனாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான எடிட் ஆப்சன் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்ததோடு, ட்விட்டர் எடிட் ஆப்சன் எவ்வாறு செயல்படும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ட்விட்டரில் வர இருக்கும் எடிட் ஆஃப்சன் மூலம், பயனாளர் நேரடியாக முதலில் பதிவிட்ட ட்விட்டை எடிட் செய்யமுடியாது இயலாது, ஆனால் முதலில் பதிவிட்ட ட்விட் தவறாக இருக்கும் பட்சத்தில் அந்த ட்வீட்டிற்கு விளக்கம் கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தவறான காரணங்களுக்காக அந்த ட்விட் வைரல் ஆவதை தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படி எடிட் செய்வதால் மூல ட்விட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது; அந்த ட்வீட் அப்படியே தான் இருக்கும் என்றும், எனவே பயனாளர்கள் மற்றும் மற்ற ஃபாலோயர்கள் மூல ட்வீட்டை பார்க்க முடியும் என்று ஜாக் தெரிவித்துள்ளார்.

இது quote retweet அல்லது retweet with comment போலவே இருக்கும் என்றும், விளக்கங்களை குறிக்க வண்ணங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், அடிப்படையில் பதிவிட்ட ட்வீட்டை ரிட்வீட் செய்யமுடியாது , விளக்கம் கொடுக்கப்பட்ட ட்வீட்டை மட்டுமே ரிட்வீட் செய்யமுடியும் என்றும், ஆனால் விளக்க ட்விட்டின் கீழ் மூல ட்விட்டும் சேர்ந்தே ரிட்விட் ஆகும் என்று ஜாக் தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்வதனால், பிற்காலத்தில் பல பிரச்சனையும் தவிர்க்க முடியும் என்றும், சொன்னதை சொல்லவில்லை என்று மறுக்க முடியாது என்பது போன்ற காரணங்களை தடுக்க முடியும் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆக மொத்தத்தில் பயனாளர்கள் எளிதாக தவறை திருத்தும் வகையில் எடிட் ஆப்சன் கொடுக்காமல், தவறு செய்தால் அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த எடிட் ஆப்சன் எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 Comments

Write A Comment