இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து நடத்திய விசாரணையின் போது உரிய ஆவணங்கள் இன்றி சென்னையில் தங்கி இருந்த அந்நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சிக்கினார்.
தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியான தீவிரவாதி எனக் கருதப்படும் ஹசன் குண்டுவெடிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன் சென்னை மண்ணடிக்கு வந்து சென்றதாக கிடைத்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, ஹசன் சந்தித்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் பூந்தமல்லியில் இருப்பது தெரிய வந்தது. இதைதையடுத்து அங்கு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 3 பேரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது.
அப்போது 3 பேரில் ஒருவரான துனுகாரோஷன் என்பவர் கடந்த ஓராண்டாக உரிய ஆவணங்கள் இன்றி சென்னையில் தங்கியிருந்தது தெரியவந்தது மேலும் இலங்கையில் அவர் மீது கொலை வழக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையது அவர் பூந்தமல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
0 Comments