கான்ராட் ராய் என்ற 18 வயதான நபர், கடந்த 2014-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு அப்போது உதவிய 17 வயது இளம்பெண் குற்றவாளிதான் என மசாசுசெட்ஸ் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
தமது ஆண் நண்பர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறியதும், அவரின் முடிவால் குடும்பம் சந்திக்க போகும் பாதிப்பை எடுத்துக் கூறி, தற்கொலை செய்வதை தடுக்காமல், தற்கொலை செய்வதற்கான வழிமுறைகள், ஆலோசனைகள் குறித்து அவரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
தற்கொலைக்கு இதுவே சரியான நேரம், தயாராகு என்று அந்த பெண் குறுஞ்செய்தி அனுப்பியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 17 வயதான அவரது தோழி ஒருவரை குற்றவாளி என ஏற்கெனவே கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டிரும் அவரது குற்றத்தை மாசச்சூசெட்ஸ் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது 22 வயதான அப்பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
0 Comments