Tamil Sanjikai

ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என விவதாங்கள் எழுந்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலப் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது . ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் பாஜக-வை வீழ்த்த இரு பெரும் தலைகளை முன்னிறுத்தினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஆன அசோக் கெலாட் ஒரு புறமும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட் மற்றொரு புறமும் காங்கிரஸின் வெற்றிக்காக நியமிக்கப்பட்டார்கள்.

இரு பெரும் தலைகள் ஒரே மாநிலத்தில் ராகுலால் களம் இறக்கப்பட்ட போதே காங்கிரஸ் வென்றால் முதல்வர் யார்? என்ற கேள்விகள் எழத்தொடங்கின. ஆனால், அசோக் கேலாட், சச்சின் பைலட் இருவருமே காங்கிரஸின் வெற்றி தான் முதலில் முக்கியம் எனக் கூறி வந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் வெற்றி பெறும் சூழல் ராஜஸ்தானில் அமைந்துள்ளது. இதுவரையில் ஐந்து முறை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் அசோக் கெலாட். தொடர்ந்து காங்கிரஸின் முக்கியப் பதவிகளைப் பெற்று வருபவராக உள்ளார்.

பாரம்பரியமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த அவர் காங்கிரஸ் தலைவர் ராகுலின் மதிப்பைப் பெற்றவராக, அதேவேளையில், காங்கிரஸ் மத்திய அமைச்சராக இருந்தவர் சச்சின் பைலட். 2019 நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்தே காங்கிரஸ் செயல்பட்டு வருவதால் ராகுலுக்கு மத்தியில் கண்டிப்பாக ஒரு இளம் தலைவரின் தேவை உள்ளது. இதன் அடிப்படையில் ராஜஸ்தான் முதல்வராக மூத்த அரசியல்வாதி அசோக் கெலாட் வரலாம் என்றும் சச்சின் பைலட் மத்தியில் காங்கிரஸ் சார்பாக கொண்டு வரப்படுவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Comments

Write A Comment