தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த இடங்களை 2-வது நாளாக பார்வையிட சென்றார்.
கந்தவர்கோட்டை அருகே துணை முதலமைச்சர் சென்ற போது, அங்கிருந்த பொதுமக்கள் அவர் சென்ற வாகனத்தை வழிமறித்தனர். காரில் இருந்து கீழே இறங்கிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பொதுமக்களுடன் சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்தார்.
மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்படும், உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
0 Comments