கனடாவில் உறைந்து போன ஏரி ஒன்றில் அடுக்கடுக்காக பனி உறைந்திருப்பது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஆல்பர்ட்டா என்ற இடத்தில் உள்ள ஆப்ரஹாம் என்ற ஏரி கடும் பனி காரணமாக கடந்த சில வாரங்களாக உறைந்து போயுள்ளது. இந்த ஏரியின் அடிப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் மீத்தேன் வாயு வெளியானது.
இதன் காரணமாக ஏற்பட்ட வெப்பத்தினால் ஏரியின் உள்புறம் உறைந்திருந்த பனி வட்ட வடிவமாக அடுக்கி வைத்தார்போலக் காணப்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் இயற்கையின் அதிசயத்தை கண்டு அதிசயித்து வருகின்றனர், மேலும் புகைப்படக்காரர்கள் பலரும் இதை படம் பிடிக்க வந்த வண்ணம் உள்ளனர்.
0 Comments