Tamil Sanjikai

பாராளுமன்ற தேர்தலில், கடந்த முறையை போல இந்த முறையும் உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் தான் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வாரணாசி மக்களவை தொகுதிக்கு மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி துவங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிரோமனி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்சிங் பாதல், ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும், சமாஜ்வாடி சார்பில் ஷாலினி யாதவ் என்ற பெண் வேட்பாளரும் போட்டியிடுகிறார்கள்.

0 Comments

Write A Comment