Tamil Sanjikai

பஞ்சாப்மாநிலத்தில் உள்ள லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் 300 மாணவர்கள் மாணவர்கள்,சேர்ந்து கூட்டாக இந்தியாவிலேயே முதன்முறையாக ஓட்டுநரில்லாமல் இயங்கும் சோலார் பேருந்தை தயாரித்து அசத்தியுள்ளனர்.

ஒரு மணி நேரத்திற்கு 30 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்தில் 10லிருந்து 30 நபர்கள் வரை பயணம் செய்யமுடியும். மேலும், ஒரு தடவை சார்ஜ் போட்டால் 70 கி.மீ வரை இந்த பேருந்தின் மூலம் பயணம் செய்யலாம்.

ப்ளூடூத், GPS போன்ற பல தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்துள்ள இந்த பேருந்தின் விலை 6 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் மாசு ஏற்படாத வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்தை விமான நிலையம் போன்ற இடங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட Indian Science Congress-ல் இந்த பேருந்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment