இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 12–வது சுற்றான ஹங்கேரி கிராண்ட் ப்ரி பந்தயம் அங்குள்ள ஹங்காரோரிங் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 306.63 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 35 நிமிடம் 03.796 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்ததோடு 25 புள்ளிகளையும் தன்வசப்படுத்தினார்.
இந்த சீசனில் ஹாமில்டனின் 8–வது வெற்றி இதுவாகும். தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்த நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி), ஹாமில்டனை விட 17.7 வினாடி பின்தங்கி 2–வதாக (19 புள்ளி) வந்தார். முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 3–வதாக வந்து 15 புள்ளிகளை பெற்றார்.
இதுவரை நடந்துள்ள 11 சுற்று முடிவில் ஹாமில்டன் 250 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 188 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், வெர்ஸ்டப்பென் 181 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று பந்தயம் பெல்ஜியத்தில் செப்டம்பர் 1–ந்தேதி நடக்கிறது.
0 Comments