Tamil Sanjikai

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பிரணவ் சிங் சாம்பியன். பா.ஜ.க., எம்.எல்.ஏ.வான இவர், இரு கைகளிலும் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு நண்பர்களுடன் நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் ‘வைரல்‘ ஆனது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க., எம்.எல்.ஏ. பிரணவ் சிங் சாம்பியனை அக்கட்சி தலைமை 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இது மிகவும் முக்கியமான விஷயமாகும், இதுபோன்ற செயலை சகித்துக்கொள்ள முடியாது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜனதா கூறியுள்ளது.

0 Comments

Write A Comment