Tamil Sanjikai

சென்னை போர் நினைவுச் சின்னம் அருகில், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் கம்பால் அடித்து உடைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த காட்சியில், சாலையோரமாக நின்றிருந்த இருசக்கர வாகனத்தை காவலர் ஒருவர் கம்பால் அடித்து நொறுக்குகிறார். உடன் உதவி ஆய்வாளரும் இருக்கிறார். தொடர்ந்து உரிமையாளர் ஓடி வந்து காவலருக்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், வானகத்தை எடுத்து செல்கிறார்.

இது குறித்து கூறிய காவலர், வாகனத்தை ஓட்டி வந்த கல்லூரி மாணவன், அந்த பகுதியில் கஞ்சா கிடைக்கும் என்ற எண்ணத்தில் சுற்றிக் கொண்டிருந்தவன் என்று தெரிவித்தார்.

மேலும், பல முறை கண்டித்தும் கேட்காத நிலையில் ரோந்து சென்று திரும்பிய போது, வாகனம் நிறுத்தப்பட்டு இருந்ததால் அடித்து விரட்டியதாகவும் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment