Tamil Sanjikai

கவுகாத்தி அருகே உள்ள மதுப்பூர் வாரச் சந்தைப்பகுதியல் பல ஆண்டுகளாக பிஸ்வாந்த் சாரியலி கிராமத்தை சேர்ந்தவர் சவுகத் அலி (வயது68) என்ற முதியவர் மாட்டிறைச்சி உணவு சமைத்து தனது ஓட்டலில் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வாரச்சந்தைக்குள் புகுந்த ஒரு கும்பல் திடீரென சவுகத் அலியை கடைக்குள் இருந்து இழுத்து வந்து அடித்து உதைத்துள்ளனர். மேலும் முதியவர் என்று கூட பாராமல் அவரை மூர்க்கத்தனமாக தாக்கிய கும்பல் சவுகத் அலியை பன்றி இறைச்சி சாப்பிடவும் வற்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் கண்டனங்களுடன் வைரலாக பரவிவருகிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக கூறியுள்ள போலீஸ், இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சவுகத் அலியை கும்பல் தாக்கும்போது வங்காளதேசியா? என்ஆர்சி சான்றிதழ் பெற்றுள்ளீர்களா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுகிறது.

இங்கு 40 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வரும் நாங்கள் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்து வருகிறோம். இதுபோன்ற பிரச்சனையை இதுவரை எதிர்க்கொண்டது கிடையாது. யாரும் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்ய தடை செய்யவும் இல்லை. இப்போது இதுபோன்ற கொடூரம் நடந்துள்ளது. எங்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அளித்திருந்தால், நாங்கள் மாட்டிறைச்சி உணவு சமைக்காமல் இருந்திருப்போம். அல்லது சட்டப்படி நடவடிக்கையை எடுத்து இருக்கலாம். ஆனால் கொடூரமாக என்னுடைய சகோதரர் நடத்தப்பட்டுள்ளார் என சவுகத் அலியின் சகோதரர் முகமது சஹாபுதீன் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment