முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக குடிநீர் தேவைக்காக்க திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குமுளி மலையின் இரைச்சல் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீர், முன்னறிவிப்பின்றி நிறுப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
அணையின் மதகு பராமரிப்பிற்காக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாக தமிழக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், தமிழகத்தின் குடிநீர் தேவைக்காக அணையை விரைவில் திறப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள பொதுப்பணித் துறை உறுதி அளித்துள்ளது.
0 Comments