Tamil Sanjikai

ஒபெக் நாடுகள் ,கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் சவூதி அரேபியா தலைமையிலான ஒபெக் நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பது குறைத்து உறுப்பு நாடுகள் அதிருப்தி தெரிவித்தன. விலையை உயர்த்தும் பொருட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் ஒருமனதாக தீர்மானித்தன. ஆனால் ஒபெக் கூட்டமைப்பில் இடம்பெறாத ரஷ்யாவின் நிலைப்பாடு என்னவென தெரியவில்லை.

ரஷ்யாவுடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிறகு கச்சா எண்ணெய் உறபத்தியை எவ்வளவு குறைப்பது என்று ஒபெக் நாடுகள் தீர்மானிக்கின்றன. அவ்வாறு நடந்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும். அதற்கேற்பவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிப்பதால் அவற்றின் விலையும் அதிகரிக்கும். 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் விலை குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனங்கள் முயற்சிக்கும் என்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Write A Comment