உடல்நலக்குறைவின் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார்.
தேமுதிக கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றார். இந்நிலையில் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் விஜயகாந்த் நடந்து செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் வருகையையொட்டி தேமுதிக தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.
0 Comments