Tamil Sanjikai

திமுக தொடர்ந்த வழக்கால் தான் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தோல்வி பயத்தால் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக பணம் விநியோகம் செய்ததாகவும், திமுக தொடர்ந்த வழங்கினால் தான் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாமல் போனது என குற்றம்சாட்டினார். மேலும், பஞ்சமி நிலம் குறித்த பட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸின் கேள்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

0 Comments

Write A Comment