போகி பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
மாசில்லா போகி என்ற தலைப்பில் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து கருத்தரங்கம், நடைபெற்றது. அதில் உரையாற்றிய அதன் தலைவர், ஷம்பு கல்லோலிக்கர் பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள், டயர் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை இருப்பவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர் சென்னையில் மாசு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் காவல் துறையினர் இணைந்து முப்பது குழுக்களாக பிரிக்கப்பட்டு ரோந்து பணிகளில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
0 Comments