Tamil Sanjikai

வெளிநாட்டில் இருந்து வரும் நிதி தொடர்பான விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம்(FCRA), 2011 விதியின்படி இயக்குனர்கள் போன்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே வெளிநாட்டிலிருந்து வரும் நிதியை பெற அனுமதி கோர முடியும்.

அதேபோன்று தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினரும் வெளிநாட்டில் இருந்து வரும் நிதியை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், உறுதிமொழியின் வாயிலாகவோ அல்லது பிரமாணப் பத்திரத்தின் வாயிலாகவோ வெளிநாட்டிலிருந்து நிதிகளை பெறமுடியும். மதமாற்றத்தில் ஈடுபட முடியாது. அதேபோன்று தனிப்பட்ட நபர்கள் ஒரு லட்சம் வரையிலான தொகையை வெளிநாட்டில் இருந்து நிதியாக பெற முடியும். மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திடீரென வெளிநாட்டு சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை வந்தால் ஒரு மாதத்திற்குள் இந்திய அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். வெளிநாட்டில் சிகிச்சை பெறும் போது இந்திய ரூபாயில் அது எவ்வளவு மதிப்பு, எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது, பயன்படுத்தப்பட்ட விதம் உள்ளிட்ட முழு விபரங்களும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் இந்த விவரத்தை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment