Tamil Sanjikai

பாகிஸ்தானின் அத்துமீறல்களைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அமிர்தசரஸ் பகுதியில் விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வந்து செல்லக் கூடிய விமான சேவைகள் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பல விமானங்கள் புறப்பட்ட நாடுகளுக்கே திரும்பிச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது சில விமானங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் மாற்று வழி கேட்டு காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் உள்ள அணைத்து விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்தியாவை தொடர்ந்து லாகூர், முல்தான், பைசலாபாத், சியால்கோட் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் விமான சேவையை ரத்து செய்தது பாகிஸ்தான்.

எல்லையில் பதற்றத்தை தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்கு பிறகு
எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரை தயார் நிலையில் இருக்க மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.

எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியை தீவிரமாக கண்காணிக்குமாறு எல்லைபாதுகப்பு வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் ரா, தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர்கள்.மத்திய உள்துறை செயலாளர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பங்கேற்றனர்.

0 Comments

Write A Comment