Tamil Sanjikai

இந்திய தேர்தல் கமி‌ஷன் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–

தண்டனை பெற்ற கைதிகளை பரோலில் விடுவிப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக கருதப்படும். சில குறிப்பிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக தண்டனை கைதிகளை பரோலில் விடுவிக்க வேண்டுமானால் மாநில அரசு மற்றும் தலைமை தேர்தல் அதிகாரியுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அப்படி விடுவிக்கப்படும் நபர்கள் தேர்தல் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் பரோலில் வந்துள்ள கைதிகள் யாராவது இருந்தால் மேலிட பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப் பொருள் வழக்கு தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு சூழ்நிலைகளில் கட்டாயம் பரோல் வழங்க வேண்டும் என்றால் போதை பொருள் தடுப்பு பிரிவினர் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். பரோலில் அவர்கள் ஆட்சேபனைக்குரிய செயல்களில் ஈடுபட்டால் பரோலை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment