Tamil Sanjikai

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக . இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டனர்.

இதனால் அலோக் வர்மாவையும் , ராகேஷ் அஸ்தானாவையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியதுடன் இவர்களுடைய அதிகாரங்களையும் பறித்தது. மேலும் இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியான நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது.

மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, சுப்ரீம் கோர்ட்டில் அலோக் வர்மா சார்பில் மூத்த வக்கீல் பாலி எஸ்.நாரிமன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சி.பி.ஐ. இயக்குனரின் அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது. அவர் தொடர்ந்து பணியாற்றலாம். அவரிடம் அனைத்து பொறுப்புகளையும் உடனே ஒப்படைக்கவேண்டும். அதேநேரம் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை முடியும் வரை அலோக் வர்மா கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டது

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக இன்று மீண்டும் பொறுப்பேற்று கொண்டார்.

0 Comments

Write A Comment