Tamil Sanjikai

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடு பெற்றதில் நடந்த விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்க அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு பெருந்தொகை லஞ்சமாக வழங்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் கொடைக்கானல், உதகை, டெல்லி ஆகிய நகரங்களிலும், பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் சிதம்பரம் குடும்பத்துக்குச் சொந்தமான 54கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏற்கெனவே அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் சிதம்பரத்தைக் கைது செய்யாமல் இருப்பதற்கான தடையை டெல்லி உயர்நீதிமன்றம் ஜனவரி 15வரை நீட்டித்துள்ளது.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்காகச் சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Write A Comment