Tamil Sanjikai

2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒருவர் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி ஆவார்.

மற்ற இருவர்கள் எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரம்மர் ஆவார்கள். "உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறைக்காக" இவர்களுக்கு நோபல்பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

2019 பொருளாதார அறிவியல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரம்மருடன் மற்ற பிரச்சினைகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் இதே போன்ற ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களின் சோதனை ஆராய்ச்சி முறைகள் இப்போது வளர்ச்சி பொருளாதாரத்தில் முற்றிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

2019 பொருளாதார அறிவியல் பரிசு பெற்றவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் நடைமுறையில் வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான நமது திறனை வியத்தகு முறையில் மேம்படுத்தியுள்ளன. அவர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் விளைவாக, 5 மில்லியனுக்கும் அதிகமான இந்திய குழந்தைகள் பள்ளிகளில் பயிற்சி வழங்கும் திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.

0 Comments

Write A Comment