தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய ஸ்டாலின் கூறியதாவது:- “குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு நீர் ஆதாரமான 4 ஏரிகளும் வறண்டு விட்டன.
2020-ல் சென்னையில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்று நிதி ஆயோக் கூறியிருந்தது. ஆனால், 2019- ஆம் ஆண்டிலேயே குடிநீர் பஞ்சம் வந்துவிட்டது. நிதி ஆயோக் அறிக்கையை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. குடிமராமத்து பணிகள் தோல்வி அடைந்து விட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது” இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments