திருச்சி சமயபுரம் நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் துளையிட்டு ஐந்து லாக்கர்கள் உடைக்கப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வங்கியின் பின்பக்கம் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்த ஐந்து லாக்கர்களை கேஸ் வெல்டிங் மிஷின் மூலம் உடைத்து பணம் மற்றும் நகைகளை அள்ளிச்சென்று உள்ளனர். இதன் மதிப்பு ரூ. 5 கோடி வரை இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவான முக்கிய லாக்கர்கள் உடைக்கப்படாமல் தனி நபர்களின் லாக்கர்கள் மட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் பல கோடி பணம், நகைகள் தப்பி உள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து முகமூடி கொள்ளையர்கள் விட்டுச்சென்ற கேஸ் வெல்டிங் மிஷின், சிலிண்டர், ஆயுதங்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளார்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக திருச்சியின் 3 இடங்களில் வங்கிகளில் கொள்ளை நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடிவரும் நிலையில், போலீசாருக்கு சவால் விடுவது போல் மீண்டும் ஒரு மிகப்பெரிய கொள்ளையை நடத்தி உள்ளனர்.
0 Comments