சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக காங்கிரஸ் கட்சி எம்.பி சசி தரூருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் எம்.பியான சசிதரூர் கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா என்பது இந்து - பாகிஸ்தானாக மாறிவிடும் என்று கூறியிருந்தார்.
சசி தரூரின் இந்த கருத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் இன்று சசி தரூருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments