வரும் பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டியை ஒட்டி வெளியூர்களுக்கு செல்வோர் வசதிக்காக ஜனவரி 11ஆம் தேதியிலிருந்து 14காம் தேதி வரை,நான்கு நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கூறினார். இதில் சென்னையில் இருந்து 14263 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மொத்தமாக 24708 பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
சிறப்பு பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய 9 ஆம் தேதி அன்று சிறப்பு மையங்கள் திறக்கப்படும் என்றும், பண்டிகை முடிந்து திரும்பி வருவோருக்காக பேருந்துகள் இயக்குவது குறித்து ஜனவரி 2 ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். சிறப்பு பேருந்துகள் மாதவரம், தாம்பரம் மெப்ஸ், கே.கே நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், கோயம்பேட்டில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
0 Comments