கமல்ஹாசன், நடிப்பில் 1996ல் ஷங்கர் இயக்கத்தில் திரைக்கு வந்து பிரம்மாண்ட வெற்றி கொடுத்த படம் இந்தியன். இந்த படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் படத்தின் இயக்குனர் சங்கர்.
இந்தியன் இரண்டாம் பாகத்தில், கமலுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகர் பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அனிரூத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அதோடு சித்தார்த், காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு. டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனராம்.
0 Comments