Tamil Sanjikai

சென்னை, தலைமை செயலகத்தில் புதுப்பிக்கப்பட்ட மழலையர் காப்பகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தலைமை செயலகத்தில் பணிபுரியும் பெண்கள் தங்கள் குழந்தைகளை பராமரிக்கும் வகையில், 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையுடன், பல நவீன வசதிகளோடு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மழலையர் காப்பகத்தில் சுமார் 25 குழந்தைகள் வரை பராமரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழலையர் காப்பகத்தில், குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி மற்றும் பால் வழங்கப்படுகிறது.

முதலமைச்சர் தொடங்கி வைத்த இந்த மழலையர் காப்பகம், காலை 9.45 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையும் இங்கு உள்ளது.

0 Comments

Write A Comment