Tamil Sanjikai

சிபிஎஸ்இ, பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 31 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி முடிந்தது. தேர்வு முடிந்த ஒரு மாதத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.

மே 3-வது வாரம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே முடிவுகள் வெளியானது மாணவ மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்வு முடிவுகளை www.cbse.nic.in, www.cbseresults.nic.inஆகிய இணையதளங்களில் அறியலாம்.

0 Comments

Write A Comment