Tamil Sanjikai

இந்தியாவில் நவம்பர் 27-ஆம் தேதி ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹூவாய் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இடம்பெறவில்லை என்றாலும் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிரைமரி கேமரா வடிவமைப்பை பார்க்கும் போது ஹூவாய் தனது மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 10-லெவல் டைனமிக் பிரெஷர் சென்சிங் தொழில்நுட்பம், 3D ஃபேஸ் அன்லாக், 3D லைவ் எமோஜி மற்றும் ஏ.ஐ. லைவ் மாடல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் மேட் ஸ்மார்ட்போன்களில் மூன்று பிரைமரி கேமரா மேட்ரிக்ஸ் சிஸ்டம் மற்றும் OIS வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு, பிளாக், டுவிலைட் மற்றும் எமரால்டு கிரீன் உள்ளி்ட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1049 யூரோ இந்திய மதிப்பில் ரூபாய் 89,050 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment