பா.ஜ.க. தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு திடீர் வருகை தந்தார்.
இன்று காலை அங்குள்ள குசும் தீரஜ்லால் மருத்துவமனைக்கு அமித்ஷா சென்றார். சில பரிசோதனைகளுக்கு பின்னர் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக அமித் ஷா உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.
0 Comments