நாட்டிலுள்ள அனைத்து கணிணி தகவல்களையும் இனி மத்திய அரசின் உளவு மற்றும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கும். மேலும் சந்தேகத்துக்கு உள்ளான தகவல்கள் அடங்கிய கணிணிகளை பறிமுதல் செய்யவும் வழிவகை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வியாழன் அன்று வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் ஐபி எனப்படும் மத்திய உளவு துறை, போதை பொருள் கட்டுப்பாட்டு ஆணையம், அமலாக்கத்துறை இயக்குனரகம், சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை, வருவாய் நுண்ணரிவு பிரிவு உட்பட பத்து மத்திய அமைப்புகள் இனி நாடு முழுவதும் உள்ள கணிணிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள்களை இடைமறித்து பார்க்கவும் பகுப்பாய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மார்க்ஸிட் கம்யூணிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் இந்த தீர்ப்பு குறித்து கூறுகையில், ஒவ்வொரு மக்களையும் கிரிமினல் போல் ஏன் நட்த்துகிறீர்கள், ஒவ்வொரு மனிதனையும் வேவு பார்க்க பிறப்பித்துள்ள இந்த உத்தரவு சட்ட விரோதமானது, உயர்நீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை 2014 முதல் நிலவி வருகிறது, அதிலும் கடந்த 2 மாதங்களாக நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு ஒவ்வொரு இந்தியனின் கணிணியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகளை நசுக்குவதை பொருத்துக் கொள்ளமுடியாது என, புது டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
0 Comments