உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இனி ரசல் பங்கேற்கமாட்டார் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ரசலுக்கு பதிலாக சுனில் அம்பிரீஸ் அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், உலகக்கோப்பை தொடரில் ஆல்ரவுண்டர், அதிரடி ஆட்டக்காரர் ரசலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ரசல் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments