சென்னை கொத்தவால்சாவடியில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையைக் கடத்தியவரைத் சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர்.
தெருவோரம் வசித்து வந்த தம்பதியின் 4 வயது மகளை நேற்று காணவில்லை என போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தையை பெண் ஒருவர் கையைப்பிடித்து அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து காவல்நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, இதனிடையே குழந்தையை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விட்டு விட்டு அப்பெண் தப்பிச் சென்றார். தகவலறிந்து ரயில் நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்த குழந்தையை மீட்ட ரயில்வே போலீசார், காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
0 Comments