நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் மக்களவை தேர்தலில் மன்றத்தின் நிலைப்பாடு பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டி இல்லை. சட்டசபை தேர்தலே எங்களது இலக்கு.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை.
ரஜினி மன்றத்தின் கொடி, படம், பெயர் போன்றவற்றை எந்த கட்சிக்கும் ஆதரவாக பயன்படுத்த கூடாது.
தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை யார் தீர்த்து வைத்திடுவார்கள் என நம்புகிறீர்களோ அவர்களுக்கே வாக்களியுங்கள் என தெரிவித்து உள்ளார்.
0 Comments