Tamil Sanjikai

அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையை பொருட்படுத்தாமால் ஈரான் நேற்று செயற்கைகோள் ஒன்றை விண்ணில் ஏவியது. ஆனால், இந்த ஏவுகணை திட்டமிட்ட படி இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிவடைந்துவிட்டதாக ஈரான் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி முகம்மது ஜரோமி தெரிவித்துள்ளார்.

செயற்கைகோள் மூன்றாவது நிலையில், தேவையான வேகத்தை எட்டாததால், ஏவுகணையை சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்த முடியாமல் போனதாகவும். அனால், மீண்டும் விரைவில் வேறொரு செயற்கைகோளை விண்ணில் ஏவுவோம் என்றும் ஜிரோமி நம்பிக்கையோடு தெரிவித்தார்.

முன்னதாக, இந்த மாத துவக்கத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, ஈரான் செயற்கைகோள் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவ்வாறு கைவிடாவிட்டால் பொருளாதார தடைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று எச்சரித்து இருந்தார். ஆனால், இந்த எச்சரிக்கையை மீறி ஈரான் நேற்று செயற்கைகோளை ஏவியது.

இதையடுத்து, நேற்று ஈரானின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த மைக் பாம்பியோ, அந்நாடு மீது புதிய பொருளாதார தடைகள் எதுவும் விதிக்கப்படுமா? என்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. 2015 ஆம் ஆண்டு ஐநா பாதுகாப்புச்சபையில் அணு ஒப்பந்தம் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில், ஈரானின் செயற்கைகோள் திட்டம் இருப்பதாக கடந்த 4 ஆம் தேதி மைக் பாம்பியோ எச்சரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம்.

0 Comments

Write A Comment