Tamil Sanjikai

லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்றைக்கு (நேற்று) நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரன் குவிப்பில் "மாஸ்" காட்டியது. ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஹர்த்திக் பாண்டியா, தோனி, ராகுல் என எல்லா பேட்ஸ்மேன்களும், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரின் பந்துவீச்சையும் சரமாரியாக சிதறடித்தனர்.

இந்திய அணி வீரர்களின் பாட்னர்ஷிப்பை தடுத்து, விக்கெட்டுகளை வீழ்த்த ஆஸ்திரேலிய அணியினர் படாதபாடு பட்டனர். இதனிடையே, ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த பந்தை சேதப்படுத்தினாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக நெட்டிசன்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியொன்றை எழுப்பியுள்ளனர். அதில், "ஆடம் ஜம்பா தான் பந்துவீசிய ஒரு ஓவரில், ஒவ்வொரு பந்தை வீசுவதற்கு முன்பும் தமது பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஏதோயொன்றை எடுத்து பந்தின் மீது தடவுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளி வந்துள்ளன. அவர் தனது பேண்ட் பையிலிருந்து எடுத்தது மணல்துகள்களை கொண்ட காகிதமா? (SandPaper), அதனை கொண்டு ஜம்பா பந்தை சேதப்படுத்தினாரா?" என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2018 மார்ச் மாதம் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பேன்கிராஃப்ட், வார்னர் மற்றும் ஸ்மித் சிக்கி, 1 வருடம் கிரிக்கெட் போட்டி விளையாட தடை விடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment