Tamil Sanjikai

தென் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து தாழ்வு பகுதியாக மாறியுள்ளதால் தமிழகம், புதுவையில் கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சொல்லியிருக்கிறது.

ராமேசுவரத்தில் இருந்து இன்று சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500 மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். அவர்கள், மீன்வளத்துறையினரிடம் அனுமதிச்சீட்டு கேட்டபோது கொடுக்க மறுத்து விட்டனர்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் பாக் ஜலசந்தி பகுதியில் கடல் சீற்றம் அதிகம் உள்ளதாகவும், காற்றின் வேகம் அதிகமாக உள்ளதாகவும், மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்திச்சென்றனர்.

0 Comments

Write A Comment