Tamil Sanjikai

பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவருடைய சகோதரி பர்யால் தால்பூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியதற்கு இடையே ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார் சர்தாரி. ஆனால் கோர்ட்டு அதனை நிராகரித்துவிட்டது.

இதனையடுத்து சர்தாரியை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவருடைய சகோதரியை இன்னும் கைது செய்யவில்லை. இதுதொடர்பாக முழுமையான விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 -13 ஆம் ஆண்டு வரை, பாகிஸ்தான் அதிபராக இருந்த ஜர்தாரி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனசீர் புட்டோவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment