இரண்டு வருடங்களுக்கு முன்னர், கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த 'பிக்செல்' ஸ்மார்ட் போனில் இருந்த புகைப்படக் கருவியின் புகைப்படத்தின் தரம், வேறு எந்த ஸ்மார்ட் போனிலும் இல்லாத அளவில் தரமாக. அந்தத் தரத்தை மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள் எட்டுவதற்கு முன்னரே கூகுள் பிக்செல் தனது ஸ்மார்ட் போனில் மேலும் ஒரு புதிய அம்சத்தை சேர்த்துள்ளது, இருட்டில்கூட மிகத் துல்லியமாகவும், தெளிவாகவும் படம் எடுக்கும் திறனை கொண்டது, இதனை ஆங்கிலத்தில் நைட் விஷன்(Night Vision)என்று அழைக்கிறார்கள்.
வெளிச்சமே இல்லாத இடங்களிலும், இரவிலும் இந்த ஸ்மார்ட் போனின் புகைப்பட கருவியில் நைட் விஷன் மோடுக்கு மாற்றினால் போதும், பகல் வெளிச்சத்தில் எடுத்ததை போன்றே மிகத் தெளிவான புகைப்படங்களை எடுக்கும் சிறப்பம்சம் இந்த மொபைல்ஃபோனில் உள்ளது. தற்போது பிக்செல் 3 மற்றும் பிக்செல் 3 XL லில் மற்றுமே நைட் விஷன் கேமரா வசதி உள்ளது. ஆனால் இன்னும் சில நாட்களில் பிக்செலின் பழைய வகை ஸ்மார்ட் போனிலும் இந்த வசதி மென்பொருள் மேம்படுத்தல் மூலம் வழங்கப்படும் என தெரிகிறது.
0 Comments