உலகின் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மெசேஜிங் செயலிகளில் முதன்மையானது வாட்ஸ் அப்.. ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமான இந்த செயலியை பயன்படுத்தாத இந்தியர்கள் வெகு சிலரே.
தொலைத்தொடர்பில் அத்தியாவச செயலியாக மாறிவிட்ட வாட்ஸ் அப் கடந்த 10 ஆண்டுகளாக பல மாறுதல்களுடன் பயன்பாட்டில் உள்ளது. அவ்வப்போது இதில் பல சுவாரஸ்யமான மாறுதல்களையும், மேம்படுத்தல்களையும் அந்நிறுவனம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய வசதி ஒன்றினை வாட்ஸ் அப் பெறவுள்ளது.
சமீப காலமாகவே பாதுகாப்பு காரணமாக செயலிகள் பயன்படுத்துவது தொடர்பாக மக்களிடையே ஒரு அச்சம் நிலவி வரும் நிலையில் நமது வாட்ஸ் அப் உரையாடல்களை பாதுகாக்கும் வகையில் கைரேகை அங்கீகார வசதி இதில் புகுத்தப்பட உள்ளது. இதற்கான செயல் பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக வெளியிடப்படும் புதிய பதிப்பில் இந்த வசதி இடம்பெறும் என்று தெரியவருகிறது.
இதன் மூலம் செயலியை உள்நுழையும் போதே கைரேகை உள்ளிடும் பகுதி தோன்றும், இதனையடுத்தே chat ஸ்கிரீனுக்கு செல்ல முடியும். இதன் மூலம் பிறர் நமது உரையாடல்களை பார்ப்பது தடுக்கப்படுகிறது. நமது தனிப்பட்ட தகவல்களை பிறர் நமக்கு தெரியாமல் பார்ப்பதும் இதன் மூலம் தடுக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பை இந்த புதிய வசதி நமக்கு சாத்தியப்படுத்துகிறது.
0 Comments