அழிந்து விட்டதாகக் கருதப்பட்டு வரும் ஏஞ்சல் ஷார்க் எனப்படும் தட்டைச் சுறா பல ஆண்டுகளுக்குப் பின் தென்பட்டதால் கடல் ஆய்வாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுப் பகுதியில் கடலில் துள்ளி விளையாடிய சுறா ஒன்றின் வீடியோ சமீபத்தில் வெளியானது.
இதனை ஆய்வு செய்ததில் அந்தச் சுறா அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட தட்டைச் சுறா என்பது தெரியவந்தது. இந்த வகை சுறாக்கள் ஆழ்கடலில் கடல் மணலில் பதுங்கியிருந்து வேட்டையாடும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் கூறினர். வரைமுறையற்ற வேட்டைகளால் இந்தச் சுறா கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து காணவில்லை என்பதால் இந்த இன சுறாக்கள் அழிந்து விட்டதாக கருதப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
0 Comments