Tamil Sanjikai

எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு, நவம்பர் மாதம் பைக் விற்பனை சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு முதல் ஜாவா மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதம் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனை 6 சதவீதம் வரை சரிந்து 65,744 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுவே 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 70,126 பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்து இருந்ததாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு விற்பனை 4 சதவீதம் சரிந்து 65,026 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் மாதம் 67,776 வாகனங்கள் விற்கப்பட்டு இருந்தது. அது மட்டும் இல்லாமல் ஊதிய உயர்வு, தொழிற்சாலை ஊழியர்களுக்கு மொபைல் போன் அனுமதி இல்லாதது போன்ற பல்வேறு காரணக்களுக்காகச் சென்னை ராயல் என்ஃபீல்டு ஊழியர்கள் சென்ற மாதம் நடத்திய போராட்டத்தின் காரணத்தினாலும் விற்பனை மற்றும் உற்பத்தி பாதிப்படைந்தது.

ஜாவா மோட்டார்சைக்கிள் மீண்டும் விற்பனைக்கு வரும் போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்குக் கண்டிப்பாக அது பாதிப்பினை ஏற்படுத்தும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment