Tamil Sanjikai

தமிழ் பட உலகில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மறைந்த புகழ் பெற்ற நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி பெயர்களில் வெளியான படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார்.

அடுத்து இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தை அமித் ஷர்மா இயக்குகிறார். இதில் கதாநாயகனாக அஜய் தேவ்கான் நடிக்கிறார். இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிறது. இதில் இரண்டு வேடங்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இவர் தற்போது தமிழில் அஜித்குமார் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் கீர்த்தி சுரேசும், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரும் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் சந்தித்து நெருங்கிய தோழிகளாகி விட்டனர்.

அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜான்வி கபூர் ஏற்கனவே சமூக வலைத்தள பக்கத்தில் “நான் கீர்த்தி சுரேசின் தீவிர ரசிகை. மகாநதி படத்தில் அவரது நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment