கமலின் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் மீது முட்டை, கல் வீசியது தொடர்பாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரூரில் நேற்றிரவு பிரச்சார மேற்கொண்டார். அப்போது, பிரச்சார கூட்டத்தில் அவர் மீது முட்டைகள், கற்கள் வீசப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் முட்டை, கற்கள் வீசிய நபரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், கரூர் ஒன்றிய பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் ராமச்சந்திரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, வேலாயுதம்பாளையம் போலீஸார் அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
0 Comments