Tamil Sanjikai

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் பட மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியாகியுள்ளது..

இதை தமிழில் நடிகர் கமல்ஹாசனும், மலையாளத்தில், மோகன்லாலும் வெளியிட்டனர். இதேபோல், தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவும், இந்தியில் சல்மான் கானும் வெளியிட்டனர்.

அனிருத்தின் தீம் மியூசிக் உடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில், ரஜினிகாந்த் ஆதித்யா அருணாச்சலம் எனும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்று, மோஷன் போஸ்டர் மூலம் தெரிவவந்துள்ளது.
2020 பொங்கலில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment